என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
Ennai Jenipithavaruku
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே
கன்மலையே.... கன்மலையே
உமக்கே ஆராதனை
தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவேயில்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே
எனக்காக உயிர்த்தீரே
என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
தந்தவரே-இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா
என் மேல் அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை
நித்திய ஜீவனை தந்தீரே
உமக்கு நிகரான தெய்வமொன்றும்
இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
ஆண்டவரும் நீர்தானே
முடிவில்லா இராஜ்யத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter