என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே
Ennai Belapaduthum Yesuvaalae
என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே
கூடாத காரியம் ஒன்றுமில்லை
எழுந்து புறப்படு நீ எழுந்து புறப்படு
உனக்கு சுகம் தருவார் பெலன் தருவார்
உனக்கு ஒரு ஜெயம் தருவார்
கன்மலையை பிளந்திடுவார்
உன் தாகத்தை தீர்த்திடுவார்
கானாவூரின் கல்யாணத்தின்
சந்தோஷம் தந்திடுவார்
சோர்வை மாற்றிடுவார்
புது பெலனை தந்திடுவார்
கழுகு போல செட்டையடித்து
உன்னை உயரச் செய்திடுவார்
அற்புதம் காணச் செய்வார்
உன்னை அதிசயமாய் நடத்துவார் உன்
குறைவுகளெல்லாம் நிறைவாக்குவார்
உன்னை ஆசீர்வதிப்பார்