எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
Enthan Kottai Enthan
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீர்
உம்மை போல இவ்வுலகில் யாருமில்லையே
உம்மைப் பாடி போற்றி உயர்த்திடுவேன்
இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்தார் எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
என்னைக் காக்கும் தெய்வம் நீர்
நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
பாவியான என்னை மீட்டவரே
உம்மைப்போல் இவ்வுலகில் யாருமில்லையே
இயேசுவே என் இயேசுவே - நீர்
இல்லாமல் எனக்கு யாருமில்லையே
நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீரே
நன்றி இயேசுவே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter