என் அன்பே என் அன்பே
En Anbe En Anbe
என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப் போல உம்மிடம்
வந்து பேசிட விரும்புகிறேன்
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும்
நேசித்த அன்பை பாடுகிறேன்
நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
விட்டு முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter