• waytochurch.com logo
Song # 14957

எந்தன் வாஞ்சை நீரல்லோ

Enthan Vanjai


எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மை நினைத்து பாடுவேன்
உம்மை துதித்து என்றும் போற்றி
உந்தன் நாமம் உயர்த்துவேன்

ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமாப்போல
என் ஆத்துமாவும் தேவா
உம்மை வாஞ்சித்தே கதறுதே

நீரே எந்தன் கன்மலையும்
கோட்டையும் அரனுமானவர்
என் சந்தோஷமே என் சமாதானமே
என் நித்திய நம்பிக்கையே

பரலோகில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு இயேசுவே
இப்பூவினில் உம்மையன்றி
விருப்பம் வேறு ஏதைய்யா

பாசமிகு அண்ணல் நீரே
நித்திய ஜீவனில் காரணரே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே
உந்தனை தொழுகிறேன்

பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்
நிறைந்த தேவனே
வழுவாதென்னை காத்து
கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com