என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்
En Thevaigalai Neer
என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை
குழப்பங்கள் தேவையில்லை
மனபாரங்கள் தேவையில்லை
என் தேவை எல்லாம் ஒன்றே
உந்தன் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன்
துவக்கத்தை கொடுத்தது
நீர் என்று சொன்னால்
முடிவதை கொடுப்பது
உம்மால் தான் ஆகும்
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு
குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது
உம்மால் தான் ஆகும்
கலக்கங்கள் நெருக்கங்கள்
அலை போல வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே
வாக்குகள் நிறைவேற
தாமதங்கள்ஆனாலும்
தரமான நன்மைகளை அனுப்பிடுவாரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter