என் உள் உறுப்புகள்
En Ul Uruppugal
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா
அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை - என் (2)
எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா
உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் - அப்பா
உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா
நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ
என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter