• waytochurch.com logo
Song # 14968

ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி

Hosanna Paadi Paadi


ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்

ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
சிந்திய இரத்த எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
உம்மைப் போல் ஆண்டவர் யருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
உம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை

வான தூதர்கள் வாழ்த்துப் பாடிட
வாகை சூடி வானில் வருவீர்
மேகக் கூட்டங்கள் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவை கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ இனிவரும் நாளில்
என் இருதயத்தால் என்றும்
ஸ்தோத்தரிப்பேன் நீர் வரும் வரை
உம் வழி நிலைத்திருப்பேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com