Irakam Ennai Nadathi இரக்கம் என்னை நடத்திச்
இரக்கம் என்னை நடத்திச் செல்லுது
உம் இரக்கம் என்னை நடத்திச் செல்லுது - (2)
என் பெலத்தினாலும் அல்ல
என் சக்தியாலும் அல்ல
என் திறமையாலும் அல்ல
உம் இரக்கம் என்னை நடத்திச் செல்லுது - (2) - இரக்கம்
1) தனித்தவளாய் நான் நடந்து போனாலும்
தஞ்சமாக உந்தன் கரம் தாங்குது - (2)
உடைந்து போன வாழ்க்கை என்று சொன்னாலும்
உத்தமரே உம் தயவு தாங்குது - (2)
என் உத்தமரே உம் தயவு தாங்குது - என் பெலத்தினாலும்
2) பட்ட மரம் போல நான் வாழ்ந்தாலும்
பரமனின் பார்வை என்மேல் பட்டது - (2)
கண்களில் ஒளியின்றிப் போனாலும்
கர்த்தரின் கரம் பிடித்துத் தாங்குது - (2)
என் கர்த்தரின் கரம் பிடித்து தாங்குது - (2) - என் பெலத்தினாலும்
3) அநாதையாய் நான் உலகில் வாழ்ந்தாலும்
அருமையான தகப்பனும் நீர் அல்லவோ
விதவை என்று பலர் தூற்றும் வேளையில்
வாழ்க்கையில் விடியலும் நீர் அல்லவோ - (2)
என் வாழ்க்கையில் விடியலும் நீர் அல்லவோ - (2) - என்
- பெலத்தினாலும்