இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
Immattum Kathavar
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
அவர் இனியும் நடத்திடுவார்
அவர் கிருபை என்றென்றுமுள்ளது
தாழ்வில் நினைத்தவரே
என்னை தயவாய் தூக்கினீரே
சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
உம் வார்த்தையால் தேற்றினீரே
ஆத்துமாவில் பெலன் தந்தீரே
கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
உம்மையே ஆராதிப்பேன்
உம் நீதியின் வலக்கரத்தால்
என்னை தாங்கி இரட்சிப்பவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
என்றென்றும் நம்பிடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter