• waytochurch.com logo
Song # 14984

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

Ippothum Eppothum


இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே

துதிக்கிறேன் தூயவரே
போற்றுகிறேன் புண்ணியரே

தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே

நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com