இந்த மங்களம் செழிக்கவே
Intha Mangalam Sezhikka
இந்த மங்களம் செழிக்கவே கிருபை செயும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப் பந்தலில்
சென்றம் பணத்தைக் கந்தரசமாகச்
செய்த விந்தை போல் இங்கேயும் வந்து
ஆதி தொடுத் தன்பை எடுத்தாய் -மானிடர் தமை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங் கொடுத்தாய் -பெற்றுப் பெருகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவர் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு சுதன் நீதியை நம்பிப் புரிந்த
தக்க ஆபிராமும் விண்டனன் அதனை மன
துக்குள் எலியேசர் கொண்டனன்
முக்கிய ஆரன் நிலத்தண்டினன் நினைத்தப்படி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடாரே பக்காளும் ஈசாக்குவுகுத்
தக்க மண வாளியாகத் தந்து தயை செய்தாற்போல
சத்திய வேத்தின் வாசனே அருளு பரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே பழுதணுவும்
அற்ற கிறிஸ் தேசு ராசனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்ப்
புத்திர சம்பத்துண்டாக்கி நித்ய சுப சோபனமாய்