இஸ்ரவேலை மனந்திரும்பு
Isravelea Mananthirumbu
இஸ்ரவேலை மனந்திரும்பு
உன் நேசர் வருகிறார்
அவரின் ஜனமே மனந்திரும்பு
நம் மீட்பர் வரப் போகிறார்
உனக்காய் மனதுருகும்
உன் மீட்பர் அழைக்கிறார்
உன் இதய கடினத்தினால்
நேசரைத் தள்ளினாயோ?
வீண் பெருமை புகழ்ச்சியினால்
சிலுவையில் அறைந்தாயோ?
உனக்காய் பரிந்து பேசுகின்ற
உன் இயேசு அழைக்கிறாரே
உன் பாவத்தின் மிகுதியினால்
பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
உன் மனதின் மேட்டிமையால்
உதைத்துத் தள்ளி விட்டாய்
உன் மேல் இரக்கம் வைத்த
உன் ராஜா அழைக்கிறாரே
கள்ளன் தான் வேண்டுமென்று
உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
முப்பது வெள்ளிக்காசுக்காய் - உன்
இரட்சகரை விற்றுப் போட்டாய்
உனக்காய் இரத்தம் சிந்தின
உன் தேவன் அழைக்கிறாரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter