• waytochurch.com logo
Song # 14995

இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்

Irrukiraar Oruvar Irrukiraar


இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
நம்மோடு இருக்கிறார்
எப்போதும் இருக்கிறார்
இருக்கிறார் ஒருவர் இருக்கிறார்
நமக்குள் இருக்கிறார்
உயர்த்தி பாடுவோம்

வல்லமை உடையவர்
நம்பிக்கையானவர்
நம்மை காப்பவர் நம் இயேசு
துன்பத்தில் மீட்டவர்
இரட்சிப்பை தந்தவர்
நம்முடன் இருப்பவர் நம் இயேசு

பெலவீனத்தில் பெலன் அவர்
சுகவீனத்தில் சுகம் அவர்
விடுதலை தந்தவர் நம் இயேசு
பாவத்தில் மீட்டவர்
சமாதானம் தந்தவர்
கிருபை அளித்தவர் நம் இயேசு

கவலைகள்தீர்ப்பவர்
சந்தோஷம் தருபவர்
மாட்சிமை நிறைந்தவர் நம் இயேசு
இம்மட்டும் காத்தவர்
இனிமேலும் காப்பவர்
மீண்டும் வருபவர் நம் இயேசு

இல்லையே வேறொருவர் இல்லையே
உலகில் இல்லையே
அவரைப்போல் இல்லையே

இல்லையே வேறொருவர் இல்லையே
இயேசுவைப் போல் இல்லையே
இவ்வுலகில் இல்லையே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com