• waytochurch.com logo
Song # 14999

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும்

Isravelin Thuthigul Vasam


இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே

உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம்

இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுமே

எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்
ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே

ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை
ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
ஆலயமாய் எம்மை பூவில் காண
உம் மகிமையால் நிரப்பிடுமே

உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
எம் ஆவியானவரால்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com