• waytochurch.com logo
Song # 15010

Nandri Enru Solluvom நன்றி என்று சொல்லுவோம்


நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்
நன்மைகளை நினைத்து கொண்டு
நன்றியுள்ள துதியுடன்

நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

உங்க ஜீவனைத் தந்தீர்
உமக்கு நன்றியப்பா
என் பாவத்தை சுமந்தீர்
உமக்கு நன்றியப்பா
சாப நேய்களை எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கை தந்து என்னில்
சந்தோஷம் கொண்டீர்

என்னை பெயர் சொல்லி அழைத்தீர்
உமக்கு நன்றியப்பா-உங்க அன்பை
அள்ளி தந்தீர் உமக்கு நன்றியப்பா
என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல்
என்னை மேலாக்கினீர்

வெண்கல கதவுகள் உடைத்துவிட்டீரே
இரும்பு தாழ்ப்பாள்கள் முறித்துவிட்டீரே
நல்ல பொக்கிஷங்களை
நல்ல ஆசிர்வாதத்தை
எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்

பரலோகில் என்னையும்
நீர் கொண்டு செல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை
உட்கார வைப்பீர்
நோய்களும் இல்லை
சாப பேயும் அங்கில்லை
பரிசுத்த ஆவி என்னை வழி நடத்திடுவார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com