இறைவனை நம்பியிருக்கிறேன்
Iraivanai Nambi Irukkiraen
இறைவனை நம்பியிருக்கிறேன்
எதற்கும் பயப்படேன்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
பயம் என்னை ஆட்கொண்டால்
பாடுவேன் அதிகமாய்
திருவசனம் தியானம் செய்து
ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்
அச்சம் மேற்கொள்ளாது
இறை அமைதி என்னை காக்கும்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
என் சார்பில் இருக்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
எதிராக செயல்படுவோர்
திரும்புவார்கள் பின்னிட்டு - அச்சம்
சாவினின்று என் உயிரை
மீட்டீரே கிருபையினால்
உம்மோடு நடந்திடுவேன்
உயிர்வாமும் நாட்களெல்லாம்
துயரங்களின் எண்ணிக்கையை
கணக்கெடுக்கும் தகப்பன் நீர் -என்
கண்ணீரைத் தோற்பையில்
சேர்த்து வைத்துப் பதில் தருவீர்
மறக்கவில்லை என் பொருத்தனைகள்
செலுத்துகிறேன் நன்றி பலி
காலடிகள் இடறாமல்
காத்தீரே நன்றி ஜயா

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter