இதயமே நீ பாடு
Idhayame Nee Paadu
இதயமே நீ பாடு...
சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே
நம் தேவன் செய்த நன்மைக்காக
எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை
கண்ணின் மணிபோல் காத்தாரே
தூங்காமல் உறங்காமல் எந்நேரமும்
அருகில் இருந்து காத்தாரே
காக்கும் தெய்வம் இயேசு
காண்கின்ற தேவன் இயேசு
தாங்க முடியா பெலவீனத்தில்
வேதனை படுக்கை வியாதியினில்
நோய்களையெல்லாம் சுமந்தாரே
அற்புத விடுதலை தந்தாரே
தாங்கும் தெய்வம் இயேசு
சுகம் கொடுத்த தேவன் இயேசு
ஆயிரமாயிரம் ஆலோசனை
நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே
ஒவ்வொரு நாளும் நான் நடக்கும்
பாதையும் அவரே காட்டினாரே
நல்ல மேய்ப்பர் இயேசு
வழிநடத்தும் தேவன் இயேசு
ஜீவன் சுகம் எனக்குத் தந்து
அனுதினமும் புது கிருபை தந்து
என் ஆயுள் நாட்களை அன்றாடமும்
கூட்டி கொடுத்து காத்தாரே
அவரைப் புகழ்ந்து பாடு
செய்த செயலை நினைத்துப் பாரு

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter