Ine Nanum இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே
எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்
குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்
ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்
செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்
உருவாக்க உம்மைப் போல எவருமில்லை
குயவனின் யோசனைக்கு அளவே இல்லை
விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்
தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்
உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்
உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்