இனிமை இனிமை இது இனிமை
Inimai Inimai Ithu Inimai
இனிமை இனிமை இது இனிமை
மகிமை மகிமை புது மகிமை
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3
காலையும் மாலையும் புது கிருபை
கண்ணின் மணிபோல் காக்கும் கிருபை
இறுதிவரைக்கும் வரும் கிருபை
நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை
மலைகள் விலகினாலும் மாறா கிருபை
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை
ஆநாதி சினேகத்தால் வந்த கிருபை
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
அழகிய தேவகுமாரன் இயேசு
அளித்திட்ட அதிசயமான கிருபை
வனாந்தர வழிதனில் வந்த கிருபை
வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை
வல்லமையுள்ள தேவனின் ஆவி
வரம் தந்து காத்திட்ட தேவகிருபை

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter