இன்னமும் நாம் யேசு
Innamum Naam
இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே
தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு.
தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
தாங்கித் தயவோடு காப்பாரே!
இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து
ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல்
சீருடனே கர்த்தர் காப்பாரே!
பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து
ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை நேசித்துப் பரிபாலித்து

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter