இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
Intha Naal
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்.
நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்.
நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter