இஸ்ரவேலை ஆள்பவரே
Isravaelai Aalbavare
இஸ்ரவேலை ஆள்பவரே
யேஹோவா எங்கள் தேவனே
நீரே சர்வ வல்லவர்
நீரே சர்வ ஆளுநர்
கலங்கரை விளக்கை போல் உயர்த்தி வைத்தீர்
சீறிட்ட அலைகளை சிதறடித்தீர்
தத்தளிப்பை கடக்க செய்தீர்
அக்கரை காண செய்தீர்
நீரே சர்வ வல்லவர்
நீரே சர்வ ஆளுநர்
அடைப்பட்ட வாசலை திறந்து வைத்தீர்
கரம்பிடித்து என்னை நடத்தி சென்றீர்
நான் உனக்கு துணை நிற்பேன் என்று சொன்னீர்
வல்ல புயத்தால் தாங்கினீர்
எனது கொம்பை நீர் உயரச்செய்தீர்
பலவானின் வில்லை முறியடித்தீர்
தள்ளாடின என்னை இடைக்கட்டினீர்
தலைத்தோங்கி நிற்கச் செய்தீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter