இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
Indru Mudal Naan
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்குத் தந்திடுவேன்
பரவிப் பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தில் பலகணிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய்
கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்திலே
அன்பு கரம் நீட்டிடுவாய்