Isravelae Kartharai Nambu இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு - 2
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர் - 2
புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2
அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2
அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2