இந்தக் குழந்தையை நீர்
Intha Kuzhanthaiyai Neer
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த
பிள்ளைகள் உனக் கதிகப் பிரியம் வரலாம் என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே
பாலரைக் கையில் ஏந்திப் பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும் ஐயா
உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து
உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்
நலமாய் இதைக் காத்தாளும் நன்மைப் பராபரனே
விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடசங்கிப்
பசிய மரம் போல் தெய்வ பத்தியிலே வளர