Iyane Ivar Kaasi ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
மெய்யாய் உன்னைச் சார என்றும்
பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு
மெய்யாய் உன்னைச் சார என்றும்
பாவ முஞ்செக சால மும்விட்டுப்
பனுவ லுரைப் படியே வெகு
ஆவ லாயுன தருளி னாலுயிர்
அடையக் கதி யடைய என்றும்
நற்றுதி செயும் பத்த ராயுன்றன்
பொற்றா ளிணை போற்றி ஓங்கு
சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்
சான்றோர் நெறிசார என்றும்
இன்று தொட்டிவர் என்று மேயுனைச்
சென்றே எங்குங் கூறிப் பயன்
நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி
ஒன்றி யுயர்ந் தோங்க என்றும்
அன்று சீடராய்ப் பன்னி ருவரை
அழைத்தாய் தயை விளைத்தாய் இவர்
என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட
நின்றுன் கிருபை ஈவாய் என்றும்
ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
மெய்யாய் உன்னைச் சார என்றும்