இந்தியாவை அரசாளும் இயேசுவே
Indhiyaavai Arasaalum Yesuvae
இந்தியாவை அரசாளும் இயேசுவே
நீர் என்றென்றும் வீற்றிருப்பீர்
ஆளுகைகள் அகன்று போகும்
வல்லமைகள் மாறிப்போகும்
நீரே என்றென்னும் வீற்றிருப்பீர் (2)
1. வீறு கொண்ட வாலிபனே எழுந்துவா
வீர இயேசுவை வாழ்வில் தொழுதுவா
இந்தியர்கள் அவர் நாமம் போற்றும் தொனி
இல்லங்களில் ஒலிக்கட்டும் அது நம் பணி
2. ஒளி படைத்த உலகமைக்க எழுந்து வா
உறுதிகொண்ட நெஞ்சுடன் உணர்ந்து வா
அலைகளால் கலங்கி நிற்கும் அன்பர்கள்
நிலையான இயேசு வாழ்வு காண்பார்கள் பாவ
3. பாரதத்தின் உயிர்த்துடிப்பே எழுந்து வா
பாரெங்கும் பணிசெய்ய பாய்ந்து வா
சிலுவைக்கொடி தேசங்களில் பறக்கட்டும்
பரலோகத்தை பக்தர்கள் நிரப்பட்டும்