• waytochurch.com logo
Song # 15046

ஜெனித்தார் ஜெனித்தார்

Jenithar Jenithar


ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே

கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்

உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்

வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com