Jeeva Jothiyae ஜீவ ஜோதியே கர்த்தாவே
1) ஜீவ ஜோதியே கர்த்தாவே
ஜீவியம் தந்த கர்த்தாவே
பாதம் பணிந்தோம் கர்த்தாவே
பாவத்தையேற்றீர் கர்த்தாவே
பாவியுள் வந்த கர்த்தாவே
ஆசீர் வழங்கும் கர்த்தாவே
கண்ணில் நிறைந்த கர்த்தாவே
கடவுள் நீர் தான் கர்த்தாவே!
2) அருள்மொழி வள்ளல் கர்த்தாவே
அற்புதர் நீரே கர்த்தாவே
அதிசயங்களின் கர்த்தாவே
அன்பின் தெய்வம் கர்த்தாவே
ஆனிப்பொன்னன் கர்த்தாவே
ஆயுள் நீரே கர்த்தாவே
ஆதவன் நீர் தான் கர்த்தாவே
ஆண்டவர் நீர் தான் கர்த்தாவே!
3) கிருபை நாதனே கர்த்தாவே
கீர்த்தி போதனே கர்த்தாவே
சர்வ வல்லவர் கர்த்தாவே
சங்கடம் தீர்க்கும் கர்த்தாவே
நிலவின் ஒளியை விழிமீது
உலவச் செய்தாய் கர்த்தாவே
ஜோதி ரூபனே கர்த்தாவே
சேராபீன்களின் கர்த்தாவே!
4) இறக்கம் நிறைந்த கர்த்தாவே
இஸ்ரவேலரின் கர்த்தாவே
பாரில் வந்த கர்த்தாவே
பாவம் சுமந்த கர்த்தாவே
மகிமை தேவனே கர்த்தாவே
மன்னவன் நீரே கர்த்தாவே
மன்னிப்பின் வள்ளல் கர்த்தாவே
மாறாத தேவன் கர்த்தாவே
5) சேனைகள் பலவின் கர்த்தாவே
செங்கடலைப் பிளந்த கர்த்தாவே
பரிசுத்தர் நீரே கர்த்தாவே
பரிகாரி நீரே கர்த்தாவே
எங்கள் நீதியே கர்த்தாவே
எங்கள் வெளிச்சமே கர்த்தாவே
ராஜாங்கத்தின் கர்த்தாவே
ராஜாக்களுக்கும் கர்த்தாவே!
6) தொழுநோயாளியை எழு என்று
தொல்லை நோயை தீர்த்தவரே
விலைமாதவளை மன்னித்து
திருந்தச் செய்த கர்த்தாவே
மீனவன் பசியைப் போக்கிடவே
மீன்களை வலையில் குவித்தவரே
சீடர் பலரை இனங்கண்டு
சிறந்த குருவாய் ஜொலிப்பவரே!
7) சத்திய தேவன் கர்த்தாவே
சாரோனின் ரோஜா கர்த்தாவே
சத்தியம் நீர் தான் கர்த்தாவே
சாபம் போக்கும் கர்த்தாவே
துன்பங்கள் தீர்க்கும் கர்த்தாவே
தூயவர் நீர் தான் கர்த்தாவே
துதியின் தேவனே கர்த்தாவே
துதிக்கின்றோம் உம்மைக் கர்த்தாவே!
8) காண்பவர் நீரே கர்த்தாவே
காப்பவர் நீரே கர்த்தாவே
கள்ளனை மன்னித்த கர்த்தாவே
கருணை உள்ளம் கொண்ட கர்த்தாவே
கிருபையுள்ள கர்த்தாவே
கிருபை தருவாய் கர்த்தாவே
ஜெபத்தைக் கேட்கும் கர்ததாவே
ஜெயம் கொடுக்கும் கர்த்தாவே!