ஜன கன பாடல் கிறிஸ்தவ வரிகளில்
Jana Gana Mana In Christian Style
இமயமும் குமரியும் எல்லைக் கடலுடை
எந்தாய் நாட்டினை காத்தார்
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிட தேச தலைவர் மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் இயேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம்நாடே
சாந்தி இதற்கில்லை ஈடே - இமயமும்
ஜெயமே! ஜெயமே! ஜெயமே!
ஜெய ஜெய ஜெய ஜெயமே..!
உழவெழ தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யாமொழி மாகாணத் தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற் கிறிஸ்துவின் சிலுவை சேவை
நட்புடன் கருணை விளங்க
பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப்பகர் தெருளே,
பாரதம் போற்ற மெய்ப் பொருளே! - இமயமும்
ஜெயமே! ஜெயமே! ஜெயமே!
ஜெய ஜெய ஜெய ஜெயமே..!