• waytochurch.com logo
Song # 15069

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

Jeyitharae Jeyitharae


ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே

வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் முழங்கால் முடங்கிடுமே
வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் நாவும் அறிக்கையிடும்

நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தைக் குலைத்தாரே
சத்துருவின் கையில் இருந்து
நம்மை விடுதலையாக்கினாரே

கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜா

எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்கப் பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்து விட்டார்

ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின்மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே

மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com