Jeeva Nathiye Enthan ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2
உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே
கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே