• waytochurch.com logo
Song # 15073

ஜீவனே நித்திய ஜீவனே

Jeevane Nithya Jeevane


ஜீவனே நித்திய ஜீவனே
ஜீவனே பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
ஜீவனே நித்திய ஜீவனே

காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த

வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லரும் கிருபைப் பிரதாபன்
துல்லிபத்தின் ஞான தீபன் நல்லவர்க்கருள் தயாபன்
அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
ஆன வான மோன ஞான நேசமே

நித்திய கிருபைப் பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன்
சத்திய வேதத்தின் வாசன் ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர
தேசு லாச நேச மேசியா வேந்தே

வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை உடைத்த நித்தர்
மேன்மை தேவத்துவ பரிசுத்தர் கானத்துற்றெமைக்கரிசித்தர்
மட்டளவற்றோர் மாட்டுக் கொட்டிலிலுற்றோர் இன்று
வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com