• waytochurch.com logo
Song # 15076

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்

Jeya Kristhu Mun Selgiraar


சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு அதை அறிந்தே அகமகிழ்வோம்

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே

மேய்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார்

சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிபோம்

கறை திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com