• waytochurch.com logo
Song # 15084

kalaiyil eluntatum naan காலையில் எழுந்ததும் நான்



காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை நோக்கிடுவேன்
கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன் - (2)

1) எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றீரே - (2)
எதிரி என்ன செய்வான்?
எப்படி மேற்கொள்வான்? - (2) - காலையில்

2) எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என் பக்கம் இருக்கின்றீரே - (2)
ஏன் நான் கலங்கிடனும்?
ஏன் நான் பயப்படனும்? - (2) - காலையில்

3) தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவாயீரே நீரே - (2)
எதையுமே இழப்பதில்லை
ஒன்றுமே குறைவதில்லை - (2) - காலையில்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com