Kumbida Pona Deivam கும்பிடப் போன தெய்வம்
கும்பிடப் போன தெய்வம் எனக்கு குறுக்கே வந்தது
வாழ்வில் குறைவுகளெல்லாம் தீர்த்திட என்னை தேடி வந்தது
நான் கண்ட தெய்வம் என்னைக் கைவிட்டது
நான் அறியாத இயேசு தெய்வம் என்னைத் தேடிவந்தது
அவரின் அருமை பெருமை சொல்லிடத் தான் நான் ஓடி வந்தது
சாமி என்றாலே ஒரு சுவாமி அவர் இயேசு சுவாமி
நாம வாழும் இந்த பூமிக்கெல்லாம் பெரிய சாமி - கும்பிடப் போன
1) நாயீனூர் விதவை மகனின் மரண ஊர்வலம் - குறுக்கே
நாதர் இயேசு நடந்து வந்த அழகு அற்புதம் - (2)
நாதியற்ற விதவையவளின் கண்ணீர் வெள்ளம் - (2) கண்டு
நாதன் இயேசு மனதுருகி எழுப்பின ஜாலம்
மரித்த வாலிபனும் உயிருடன் எழுந்தான் என்ன அதிசயம் - சாமி
2) பன்னிரெண்டு வருஷங்கள் உதிர பாடுபட்டாள் - அவள்
பார்க்காத வைத்தியங்கள் பார்த்து விட்டாள் - (2)
அவளோட வாழ்வில் இயேசு குறுக்கே வந்தார் (2) - அவளோ
இயேசுவின் மேலாடையைத் தொட்டு சுகமடைந்தாள் - (2) - சாமி
3) ஆயிரம் நாவுகளால் சொல்ல முடியுமா? - அவர்
அதிசயத்தை சொல்லாமல் இருக்க முடியுமா? - (2)
அவர் கிருபை இல்லாமல் பிழைக்க முடியுமா? - (2)
உலகில் இயேசுவோட தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா- இயேசு
சுவாமியோட தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா - (2) சாமி