• waytochurch.com logo
Song # 15089

கடல் கடந்து சென்றாலும்

Kadal Kadanthu Sendraalum



கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன்
அஞ்சாதே கலங்காதே

தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும்
உன் நிலை உயர்ந்தது அவராலே
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
அஞ்சாதே கலங்காதே -- (கடல் கடந்து)

பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார்
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
அஞ்சாதே கலங்காதே -- (கடல் கடந்து)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com