• waytochurch.com logo
Song # 15091

கானாவூரின் கல்யாணத்தின்

Kaana Oorin



கானாவூரின் கல்யாணத்தின் சிறந்தவரே
அற்புதமாய் திராட்ச ரசம் கொடுத்தவரே
விருந்தினர்கள் அகமகிழ செய்தவரே
குறைவுகளை நிறைவாக்கித் தருபவரே
உம் மகிமைகளை ஆடிப்பாடித் துதிக்க வந்தோம்
உம் மகிமைகளை ஆடிப்பாடித் துதிக்க வந்தோம்

கானாவூரின் கல்யாணத்தின் சிறந்தவரே
அற்புதமாய் திராட்ச ரசம் கொடுத்தவரே

அஞ்சு அப்பத்தோட இரண்டு மீனக் கொண்டு
பலபேரு பசியாறச் செய்தீரே
வயிறார பசிப் போக செய்தீரே
தூண்டில் மீன் பிடிச்சு முதல் மீன் வாய்திறந்து
நாணயத்தை வரியாகக் தொடுத்தீரே
பேதுரு வழியாகக் கொடுத்தீரே
கடல் மேல் நீர் நடந்தீர் பெறும் காற்றை நீர் அதட்டி
கடல் இரையாமல் அடங்கியிருக்கச் செய்தவரே
கடல் இரையாமல் அடங்கியிருக்கச் செய்தவரே - கானாவூரின்

தாவீதின் வம்சத்தில மகனாப் புறந்தவரே
லாசரு உயிர் திரும்ப செய்தீரே
மரியாளின் மனமகிழ செய்தீரே
பார்வையற்றவனின் விழிகளைத் திறந்தவரே
செவிடரின் செவி திறக்க செய்தீரே
பலரின் நோய் தீர செய்தீரே
மனுவாய் அவதரித்தீர்
பலர் செழிக்க உம்மைக் கொடுத்தீர்
இன்னும் பல மகிமை சொல்வதற்கு வரியில்லையே
இன்னும் பல மகிமை சொல்வதற்கு வரியில்லையே - கானாவூரின்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com