• waytochurch.com logo
Song # 15102

காணாமல் போன என்னை

Kanamal Pona Ennai


காணாமல் போன என்னை
நல் மேய்ப்பர் தேடினார்
தம் தோளின் மேல் போட்டுக்
கொண்டன்பாய் இரட்சித்தார்
மேலோக தூதர் கூடினார்
ஆனந்தம் பொங்கிப் பாடினார்

நேசர் தேடி வந்தார் இரத்தம் சிந்தி மீட்டார்
என்னைச் சொந்தமாகக் கொண்டனர்
பேரன்போடு சேர்த்துக் கொண்டனர்

என் பாவக் காயம் கட்டி
வீண் பயம் நீக்கினார்
என் சொந்தமாக உன்னைக்
கொண்டேனே பார் என்றார்
அவ்வின்ப சத்தம் கேட்கவே
என் உள்ளம் பூர்ப்பாயிற்றே

பேரன்பராகத் தோன்றி
ஐங்காயம் காட்டினார்
முட்கிரீடம் சூடினோராய்
என்னோடு பேசினார்
இப்பாவியின் நிமித்தமே
படாத பாடு பட்டாரே

இப்போது இன்பமாக என் மீட்பர் பாதத்தில்
ஒப்பற்ற திவ்ய அன்பை தியானம் செய்கையில்
ஆனந்தம் பொங்கப் பூரிப்பேன்
மேன்மேலும் பாடிப் போற்றுவேன்

ஆட்கொண்ட நாதர் பின்பு பிரசன்னம்
ஆகவார் தம் ஞான மணவாட்டி
சேர்த்தென்றும் வாழ்விப்பார்
என் ,மாசும் தீங்கும் நீங்கிப்போம்
பேரின்பம் பெற்று வாழுவோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com