Kurusinil Thongiye Kuruthiyum குருசினில் தொங்கியே குருதியும்
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படித்திய கொடுமைதனை
சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியமால் நாணுதையோ தேவ
சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
துடிக்காக நெஞ்சுண்டோ
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்தோடுது பார்
எருசலேம் மாதே மறுதி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ-நின்
எருசலையதிபன் இள மணவாளான்
எடுத்த கோலமிதோ