கிருபாசனபதியே உம் கிருபைகள்
Kirubasanapathiyea Um Kirubaikal
கிருபாசனபதியே உம் கிருபைகள்
தர வேணுமே ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே
உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும்
வேகத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும்
சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
பொறுமைக்கு அதிபதியே
என் அருமை இரட்சகரே