Kalvari Malaiyoram Vaarum கல்வாரி மலையோரம் வாரும்
கல்வாரி மலையோரம் வாரும்
பாவம் தீரும்
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே
லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு
தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி
ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ
உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சோ
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே -ஜோதி
மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே -ஜோதி
ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை
நாமக்கிறிஸ்தவர்க்கும் இருபங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும் -ஜோதி