கர்த்தரை எக்காலமும்
Kartharai Ekkalamum
கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி வாயிலிருக்கும்
கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி என் வாயிலிருக்கும்
கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
மேன்மையினால் நிறைந்து நிற்குதே
கனம் மகிமை அவர்க்கு உரியதே
இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே
வாதை துன்பம் வந்த வேளையில்
பாதை காட்டி என்னைத் தேற்றினார்
வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே
என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
அவர் எனக்கு செவி கொடுத்தாரே