• waytochurch.com logo
Song # 15122

காலமே தேவனைத் தேடு ஜீவ

Kalame Devanai Thedu


காலமே தேவனைத் தேடு ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சிரான நித்திய ஜீவனை நாடு

மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு

பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனு வேலனைப் பணிய

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்

வேலையுனக்குக் கைகூட சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com