• waytochurch.com logo
Song # 15123

காக்கும் தெய்வம் இயேசு இருக்க

Kakkum Deivam Yesu Iruka


காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே

இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே

பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்

காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு

சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே

சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே

மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார்
மனது உருகும் தெய்வம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com