Kalvaari Naatha Karunaiyin கல்வாரி நாதா கருணையின் தேவா
கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்