• waytochurch.com logo
Song # 15127

கீழாக்காமல் உன்னை மேலாக்கியே

Keelaakaamal Unnai Melaakkiye


கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
உன்னை நான் அபிஷேகிப்பேன்
வாலாக்காமல் உன்னை தலையாக்கியே
புது நாமம் தந்திடுவேன்
எல்லையை பெரிதாக்கி விஸ்திகரித்து
உன்னை நான் உயர்த்திடுவேன்

மறவாமல் என்றும் நான் உன்னோடு இருந்து
தாயை போல் பரிபாலிப்பேன்
உன்னை என் கண்மணி போல் நான் காத்து
புது நாமம் தந்திடுவேன்

பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை காத்து
கண்ணிமையாய் காத்திடுவேன்
என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்தி
கோட்டையாய் காத்திடுவேன்

பகலில் பறக்கும் அம்பிற்க்கு உன்னை
விடுவித்து காத்துக் கொள்வேன்
பொலாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்து
எல்லையை காத்திடுவேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com