• waytochurch.com logo
Song # 15132

karthar seiya ninaithathu கர்த்தர் செய்ய நினைத்தது


கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார் - உன்னை (நம்மை)
ஜெயமாய் நடத்துவார்
அல்லேலூயா... அல்லேலூயா (8)

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
கர்த்தருக்கு பிரியமானதே
அபிரகாமை ஆசிர்வதித்தவர்
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் - அல்லேலூயா

வழியே இல்லா இடங்களிலும் - புது
வழியை உனக்கு உண்டாக்குவார்
இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் - ஜீவ
ஒளியை இன்று ஏற்றிடுவார்
வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் - புது
வாசல் உனக்கு திறந்திடுவார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com