• waytochurch.com logo
Song # 15138

கிருபை தாரும் தேவனே

Kirubai Tharum Devane


கிருபை தாரும் தேவனே
தேவ கிருபை தாரும் தேவனே

பெலவீனத்தில் பெலன் என்றீர்
என் கிருபை போதும் என்றீர்
பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
பந்தயத்தில் வெற்றி தந்தீர்

இரட்சண்ய நாட்களை தந்தீர்
எல்லாமே இலவசம் என்றீர்
நெருக்கத்திலே விடுதலை தந்தீர்
நீதிமான் விழுவதில்லை என்றீர்

கிருபையும் அமைதியும் தந்தீர்
கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
ஆத்தும பாரங்களை தந்தீர்
அறுவடைக்கு புறப்படு என்றீர்

ஈசாயின் அடிமரம் என்றீர்
எழுப்புதல் உன்னாலே என்றீர்
ஊழிய கிருபையை தந்தீர்
உலகத்தை கலக்கிடு என்றீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com